Saturday, November 27, 2010

உதிரிப்பூக்கள்-தமிழில் உலகசினிமா




உதிரிப்பூக்கள் தமிழில் வந்த முதல் உலகசினிமா பாதை தெரியுது பார்.இயக்கியவர் இந்தியாவின் முதல் உலகசினிமாவான சின்னமோளை உருவாக்கிய நிமாய்கோஸ்.தயாரித்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள்.இப்படம் ஓடினால் தங்கள் தொழில் நாறி விடும் என்று கருதிய ஏ.வி.எம் போன்ற மசாலா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து படத்தை வாங்கி பிட் படங்கள் ஓடும் நாலாந்தர தியேட்டர்களில் ரீலிஸ் செய்து மக்களைச்சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர்.எம்.பி.சீனிவாசன் இனிய இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றும் நம் செவிக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.




உதிரிப்பூக்களை உருவாக்கிய மகேந்திரன் உருவானது முள்ளும் மலரும் படத்தில்தான்.தங்கப்பதக்கம் போன்ற மசாலா படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த மகேந்திரனுக்கு கதையே கேட்க்காமல் வாய்ப்பளித்தார் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச்செட்டியார்.ஆனால் படத்தை பாதியில் நிறுத்தச்சொல்லிவிட்டார்.காரணம் கேட்டதற்க்கு,”ரஜினி கை,காலை ஆட்டி நடித்தால்தான் ரசிப்பார்கள்....நீ ரஜினிக்கு கை இல்லாமல் படமெடுக்குறீயாமே..என் காசை கரியாக்கவா..போ வீட்டுக்கு”என்றார். கமல் கேள்விப்பட்டு சமரசம் செய்தார்.படம் நட்டமானால் நான் அடுத்த படத்துக்கு கால்ஸீட் தருகிறேன் என்று உறுதியளித்தார் கமல்.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பெண்டிங்...இனி பைசா தரமுடியாது எனச்செட்டியார் முரண்டு பிடிக்க இப்போதும் கை கொடுத்தது கமல்.அந்தப்பாடல் படமாக்க கைக்காசை கொடுத்தார் கமல்.அந்தப்பாடல் ..செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்......


இவ்வளவு உதவி செய்த கமலும்...உதவி பெற்ற மகேந்திரனும் ஏன் இணைந்து ஒரு படம் கூட தரவில்லை????????


ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு மவுஸ் வேலை செய்யமுடியாது.


முள்ளும் மலரும் மகத்தான வெற்றிபெற்றதில் அப்படத்தின் ஒளிப்பவாளர் பாலுமகேந்திராவின் பங்கு அதிகம் என்று மீடியாவும்,சினிமா இண்டஸ்ட்ரியும் சேர்ந்து கதைத்தன.எனவேதான் அசோக்குமாரோடு கை கோர்த்தார்.இவர்களது கூட்டணியில் வந்த வெற்றி படைப்புகள்

நெஞ்சத்தை கிள்ளாதே,உதிரிப்பூக்கள்,மெட்டி.

தமிழ்சினிமா உலகசினிமா பாதையில் கூட்டிச்சென்ற டிரண்ட்செட்டர் மகேந்திரன்.அந்தப்பாதை அடைத்து மசாலா பாதையில் திருப்பிவிட்டது ஏவி.எம்.என்னின் முரட்டுக்காளையும்,சகலகலாவல்லவனும்.

மகேந்திரனின் மாஸ்டர்பீஸ் உதிரிப்பூக்கள்.இன்றளவும் இப்படத்தின் தரம் இமயம்.

மனைவியின் தங்கை அழகிய நங்கை....அவளை தாரமாக்க துடிக்கிறான் நாயகன்.இவனது ஆசைக்கு எண்ணெய் வார்க்கும் சுயநலமிகளால், பலியாகிறான்.இவனது குழந்தைகள் உதிரிப்பூக்களாகின்றன.


விஜயன்,அஸ்விணி,சாருஹாசன்,சரத்பாபு என அனைவருமே யதார்த்தப்பிரதிகள்.


இளையராஜா இசையில் மோனாலிசப்பாணி கடைப்பிடித்திருப்பார்..... அழகிய கண்ணே பாடலில்..ஒரு தாயின் சந்தோசமும்,மனைவியின் துக்கமும் சரிவிகிதக்கலவையாக ஒலிக்கும்.பின்னணி இசையாக அநேககாட்சிகளில் மவுனத்தை இசையாக வழியவிட்டிருப்பார்.


படத்தின் டைட்டிலில் கதை புதுமைப்பித்தன் என்று வரும்.கதை படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.மகேந்திரன் மகத்துவம் தெரியும்.
இப்படத்தின் பாக்ஸாபிஸ் வெற்றி எல்லா பொய்களையும் கலைத்துவிட்டது.ஈரான் நாட்டு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் இப்படம் பாடம்.இந்திய அரசும் இப்படத்தை பெருமைக்குறிய சொத்தாக வாங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.